கோவை சிங்காநல்லூர், கிருஷ்ணா காலனி சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 37)இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அப்போது அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண்கோகுல கிருஷ்ணனிடம் தொடர்பு கொண்டார். ரதிமீனா என்ற தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தானும் திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி வருவதாக கூறினார்.இதைத்தொடர்ந்து இருவரும் நட்பாக பழகினார்கள். இந்த நிலையில் அந்த பெண் தான் ஒரு ஆன்லைன் செயலி அனுப்புவதாகவும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கோகுல கிருஷ்ணனிடம் ஆசை வார்த்தை காட்டினார். இதை நம்பிய கோகுல கிருஷ்ணன் அந்தப் பெண்ணின்வங்கி கணக்கிற்கு ரூ.23 லட்சம்ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்.ஆனால் அதன் பின் அந்தப் பெண்ணிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இன்ஜினியர் கோகுல் கிருஷ்ணன் இது குறித்து சோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை சுருட்டிய பெண்ணை தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0