கோவை ரேஸ் கோர்சில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிப்பவர் ஜெயன் மோகன்.இவர் என்.சி.சி. 5 – வது பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவரது தங்கை கனடா நாட்டில் மூளை டியூபர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை பார்ப்பதற்கு அவரும், அவரது மனைவியும் கனடா நாட்டிற்கு செல்ல இருந்தனர்.. இவரது மனைவியுடைய விசா 2019 பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில்இவருக்குஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிபரத்சிங் மூலம், ஐதராபாத்தை சேர்ந்த அபிஷேக், முஷார் ஆகியோர் அறிமுகமானார்கள்.இவர்கள் இருவரும் ஒரு வாரத்தில் விசா எடுத்து தருவதாக உறுதி அளித்தனர்.இதை நம்பி ஜெயந்த் மோகன் ஜோஷி அவர்களிடம்ரூ 2 லட்சத்து 12 ஆயிரத்து 650 கொடுத்தார்.அவர்கள் உறுதி அளித்தபடி ஒரு வாரத்தில் விசா எடுத்துக் கொடுக்கவில்லை. காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து ஜெயன் மோகன் ஜோசி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார்செய்தார். போலீசார் அபிஷேக், முஸ்கர் ஆகியோர் மீது மோசடி நம்பிக்கை மோசடி , கூட்டு சதி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0