குறைந்த விலையில் நகைகள் வாங்கி தருவதாக ரூ12.41 லட்சம் மோசடி. பெண் உள்பட 2 பேர் கைது.

கோவை சிங்காநல்லூர், நீலிகோணம் பாளையம், ஜெயா நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் சின்னப்பன் ( வயது 50) இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பெரியநாயக்கன்பாளையம், வண்ணான் கோவில், மேட்டு தோட்டத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )துடியலூர் ஜி. என். மில், பகவதி கார்டனைச் சேர்ந்த இமாம் கசாலி (வயது 27) ஆகியோர் அறிமுகம்ஆனார்கள். இவர்கள் விமான நிலையத்தில் பிடிபட்ட தங்க நகைகள் கோவையில் உள்ள ஒரு நகை கடையில் விற்பனை க்கு உள்ளது. அதை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறினார்கள்.  இதை நம்பியசின்னப்பன் பல்வேறு தவணைகளில் ரூ12 லட்சத்து41 ஆயிரத்தை அமுதா, இமாம் கசாலி ஆகியோரிடம் கொடுத்தார்.அவர்கள் குறைந்த விலையில் நகை எதுவும் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சின்னப்பன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அமுதா ( வயது 44)இமாம் கசாலி ( வயது 27)ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.