கோவை பீளமேடு நவ இந்தியா ,எஸ். என் .ஆர் . கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் அபார்ட் மெண்டில் வசிப்பவர் மெஹுல்பி. மேத்தா (வயது 43) வியாபாரி.இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் வாட்ஸ் அப்குழுவில் ஒரு தகவல் வந்தது. அதில் ஜோதி சர்மா என்பவர் அறிமுகம் ஆகி தனக்கு பங்கு சந்தையில்முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். அந்த நபர் கூறியதை நம்பி பல்வேறு பரிவர்த்தனைகளில் ரூ.11 லட்சத்து 89 ஆயிரம் முதலீடு செய்து பங்குகளை வாங்கி விற்றதாகவும், அதற்கான லாபமாக அந்த செயலில் உள்ள தனது கணக்கில் ரூ 15 லட்சம்கட்டியதாகவும்,அதை தனது வங்கி கணக்கில் போடுமாறு கூறியபோது மீண்டும் வளரும் செலுத்தி வர்த்தகம் செய்ய வற்புறுத்தினார் இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து கிணத்துக்கடவை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், (வயது 40)மணிகண்டன் (வயது 37) சொலவம்பாளையம் பிரபாகரன் ( வயது 39) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து வங்கி புத்தகங்கள், செக்குகள் செல்போன்கள், லேப்டாப் சிம் கார்டுகள்பறிமுதல் செய்யப்பட்டது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0