வால்பாறையில் காட்டுயானை துரத்தி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சம் அதில் முன் பணமாக 50 ஆயிரம் வழங்கி ஆறுதல்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி காட்டுயானை துரத்தியதில் படுகாயமடைந்த சந்திரன் வயது 62 என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பல னின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து தமிழக அரசு உத்தரவிற் கிணங்க கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின் தலின் படி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் வனத்துறையினர். சார்பாக வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் ஆலோசனையின்படி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.10 லட்சம் ( பத்து லட்சம்) ரூபாயிலிருந்து முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளனர் மேலும் மீதமுள்ள ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்று வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.