கோவையில் 6பிரியாணி சாப்பிட்டால், ரூ 1 லட்சம் பரிசு அறிவிப்பு. ஓட்டல் மேனேஜர் மீது வழக்கு

கோவை ரயில் நிலைய வளாகத்தில் ரயில் பெட்டி வடிவம் கொண்ட ஓட்டல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ 50, ஆயிரம் பரிசு, 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ 1 லட்சம் பரிசு என்று அறிவிப்பு விடப்பட்டது. இதை பார்த்து ஏராள மானவர்கள் அந்த ஓட்டல் முன் குவிந்தனர். இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒட்டல் மேனேஜர் கணேஷ் மீது வழக்கு பதிவு செய்தார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.