கோவை வடவள்ளியில் உள்ள ஐ.ஓ.பி .காலனியை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 61) இவர் வருவாய்த் துறையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் ஆன்லைன் பகுதி நேர வேலை உள்ளதா? என்று பார்த்து வந்தார். அப்போது ஆன்லைனில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார் :இதில் எதிர்முனையில்பேசி ஆசாமிகள் நாங்கள் பெரிய அளவிலான வர்த்தகம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய சிவக்குமார் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 27 – ந்தேதி வரை 13 தவணைகளாக அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 71 லட்சத்து 23 ஆயிரத்து 737 செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி லாப தொகை கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல கோவை அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சகஸ்ராமசுப்ரமணி ( வயது 73 )இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவார்.இவர் முதலீடு செய்வதற்காக ஆன்லைனில் விவரங்களை தேடி வந்தார். அப்போது அவரை தொடர்பு கொண்ட நபர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர் .இதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளில் ரூ 56 லட்சத்து 21 ஆயிரத்து 800 – ஐசெலுத்தியுள்ளார்..பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் இணைப்பை துண்டித்து . இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சகஸ்ராம சுப்பிரமணி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓய்வு பெற்ற 2 அதிகாரிகளிடமும் மொத்தம் ரூ 1 கோடியே 27 லட்சத்து 45 ஆயிரத்து 627மோசடி செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0