அதிக லாபம் தருவதாக கூறிபட்டதாரியிடம் ரூ 1.14 கோடி ஆன்லைன் மோசடி.

கோவை அருகே உள்ள வடவள்ளி,எம் .ஜி . காலனியைசேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 50 )பிகாம் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தே அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி கிருஷ்ணகுமார்18 தவணைகளில் பல்வேறு வங்கி கணக்குகளில்ரூ 1 கோடியே 14 லட்சத்து 15 ஆயிரத்து 679அனுப்பினார். லாபம் எதுவும் வரவில்லை .பிறகு அந்த எண் ணுடன். தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணகுமார் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.