கோவை பங்களாவில் தனியாக இருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ.3கோடி நகை, பணம் கொள்ளை : 3 பேர் கைது- கில்லாடி பெண் உட்பட 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.!

கோவை புலியகுளம் கிரீன்பீல்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 63) இவர் ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-நான் கோவைகிட்னி சென்டர் அருகில், புலியகுளம் ரோடு, கிரீன் பீல்டு காலனி, கதவு எண்-4 என்ற முகவரியில் தனியாக வசித்து வருகிறேன், எனது கணவர் இறந்து 19 வருடம் ஆகிறது, எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்த மகளுக்கு திருமணமாகி குடும்பத்துடன் இருந்து வருகிறார், இளைய மகளுக்கு திருமணம் ஆகவில்லை, தொழில் நிமித்தமாக வெளியூரில் இருந்து வருகிறார், நான் கடந்த 3 வருடமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த காலத்தில் கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணா காலனியை சேர்ந்த வர்ஷினி என்பவருடன் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக பழக்கம் ஏற்பட்டு தாய் மகள் போல பழகி வந்தோம், எனது பணம் மற்றும் நகைகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் வர்ஷினிக்கு தெரியும் எனக்கு தேவையான உதவிகளை என்னுடன் இருந்து செய்து வந்ததால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு எனது வீட்டு வரையிலும் அனுமதித்து பழகி வந்தோம், எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து போவார், கடந்த 18.03.2023ம் தேதி சொந்த தம்பி மருமகளை பார்ப்பதற்காக நான் விமானம் மூலமாக சென்னை சென்றுவிட்டு நேற்று 20.03.2023ம் தேதி மாலை சுமார் 06.30 மணியளவில் திரும்ப வீட்டிற்கு வந்து விட்டேன், அந்த நேரத்தில் மேற்படி வர்ஷினி எனக்கு போன் செய்து இட்லி, நாட்டுக் கோழி குழம்பு இருக்கிறது உங்களுக்கு கொண்டு வரட்டுமா? என்று கேட்டு விட்டு ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக பேசுவதற்காக அருண் என்பவரையும் அழைத்து வருகிறேன் என்று சொன்னார், நானும் சரி என்று சொன்னேன், இரவு சுமார் 08.15 மணி அளவில் மேற்படி வர்ஷினி அவர் சொன்னது போல் இட்லி, நாட்டு கோழி குழம்பு கொண்டு வந்து கொடுத்தார், நானும் அதை சாப்பிட்டேன் சாப்பிட்ட உடன் எனக்கு தூக்கம் வந்தது அதனால் ஹாலில் உள்ள ஷோபாவில் படுத்து தூங்கி விட்டேன், இரவு சுமார் 12.30 மணியளவில் எனக்கு முழிப்பு ஏற்பட்டு அரை தூக்கத்தில் கண் விழித்து பார்த்த போது எனது படுக்கை அறையிலிருந்து வர்ஷினியும், அருண் என்பவரும் வந்தார்கள் நான் அரை தூக்கத்திலிலேயே வர்ஷினியிடம் எனது படுக்கை அறைக்குள் ஏன் சென்றாய் என்று கேட்டதற்கு தான் ரெஸ்ட் ரூம் செல்வதற்காக போனேன் என்று சொன்னார் அதற்கு நான் வர்ஷினியிடம் ஏற்கெனவே நான் உன்னிடம் எனது படுக்கை அறைக்குள் செல்லக்கூடாது என்று சொல்லியிருக்கேன்ல அதை மீறி உள்ள போயிருக்கிறாய் என்று கேட்டதற்கு வர்ஷினி அவசரமாக போய் விட்டேன் என்று சொன்னார், அதன் பின்பு அரை தூக்கத்திலேயே ஹாலில் இருந்து நடந்து வந்து மெயின் ஹாலிற்கு வந்த போது சுவர் ஓரமாக மேற்படி அருண் மறைந்து நின்று கொண்டு இருந்தார், அவரை பார்த்ததும் நான் பயந்து போய் வர்ஷினியை பார்த்து என்ன நடக்குது வர்ஷினி இந்த வீட்ல அருண் வந்ததை நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டதற்கு வர்ஷினி என்னிடம் நீங்க அசந்து தூங்கிட்டீங்க அதனால உங்கள தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உங்களிடம் சொல்லவில்லை என்று சொன்னார், பின்னர் வர்ஷினியை பார்த்து இது சரியா படலை என்று கேட்டதற்கு வர்ஷினி என்னை சந்தேகப்படறீங்களா ஆன்ட்டி என்று சொன்னார் அதன் பிறகு அதை அப்படியே விட்டு விட்டேன், அதன் பின்பு இரவு 02.00 மணியளவில் வர்ஷினி, அருண் மற்றும் கார் ஓட்டுநர் நவீன்குமார் ஆகிய மூவரும் வர்ஷினியுடன் காரில் எனது வீட்டிலிருந்து கிளம்பி சென்று விட்டார்கள், பின்னர் நான் எனது படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது பெட்டுக்கு அருகில் இருந்து பிளாஸ்டிக் ஸ்டூல் நான் வைத்த இடத்தில் இல்லாமல் கப்போர்டுக்கு அருகில் இருந்தது, பின்னர் கப்போர்டுக்கு மேல் கட்டைப்பையில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் கீழே கிடந்தது, அதை பார்த்த பின்பு என்க்கு சந்தேகம் அதிகமானதால் கப்போர்டை திறந்து எனது நகைகளை பார்த்த போது கப்போர்டில் வைத்திருந்த சுமார் 80 பவுனிலிருந்து 100 பவுனுக்குள் எடையுள்ள தங்கம் மற்றும் வைர வளையல்கள் காணாமல் போயிருந்தது, பின்னர் பதறிப்போய் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த பணம் சுமார் 2 1/2 கோடி வைத்திருந்த அறையை திறந்து பார்த்த போது நான் பணம் வைத்திருந்த பை கீழே கிடந்தது உடனே அதை திறந்து பார்த்த போது அதில் நான் வைத்திருந்த பணம் ரூ.2 1/2 கோடி காணாமல் போயிருந்தது, நான் பதறிப்போய் வர்ஷினிக்கு போன் செய்யலாம் என்று ஹாலுக்கு வந்து எனது செல்போனை தேடிய போது எனது செல்போனை காணவில்லை நான் பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ஷோபாவில் சிறிது நேரம் அமர்ந்து விட்டேன், பின்பு சுமார் 05.00 மணியளவில் எனது வீட்டின் லேண்ட் லைன் போன் மூலமாக எனது சித்தப்பாவின் போன் நம்பர் எனக்கு ஞாபகம் இருந்ததால் அவருக்கு போன் செய்து விபரம் சொல்லி எனது பைனான்சியல் அட்வைசர் பிரதீப்குமாரின் போன் நம்பர் வாங்கி அவரை தொடர்பு கொண்டு விபரம் சொல்லி வீட்டிற்கு வர சொன்னேன், பின்னர் அவர் நேரில் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர வளையல்கள் சுமார் 80 பவுனில் இருந்து 100 பவுன்கள், பணம் ரூ. 2 1/2 கோடி மற்றும் (.ஐ.போன்-13 மாடல்) செல்போன் திருட்டு போனதை சொன்னேன், பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து வர்ஷினிக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு நகைகள் மற்றும் பணம் திருடு போன விபரத்தை சொன்ன போது வர்ஷினி தனக்கு எதுவும் தெரியாது என்றும் நான் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதாக சொன்னார், அதில் எனக்கு உடன்பாடு இல்லாததாலும் வர்ஷினி மற்றும் அருண் ஆகியோர் மீது எளக்குசந்தேகம் உள்ளது.மேற்படி நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து திருட்டு போன என்னுடைய தங்க-வைர நகைகள் மற்றும்பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.. இதற்கிடையே கொள்ளையர்ளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் உதவிகமிஷனர் சதீஷ் குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில் உள்ள போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள் .அத்துடன் ராஜேஸ்வரி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் அதில் வர்ஷினி 4பேருடன் சேர்ந்து ராஜேஸ்வரி வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் வர்ஷினி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்து வரும் அருண்குமார் ( வயது 37 )என்பவர் உட்பட 4 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. எனவே தலைமறைவான அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்க்கிடையே வழக்கில் தொடர்புடைய அருண்குமார் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பிரபு ( வயது 32) சுரேந்தர் (வயது 25 )ஆகியோர் பொன்னேரியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பொன்னேரி விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு இருந்த அருண்குமார் ,பிரவீன், சுரேந்தர் ஆகிய 3 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்தும் ரூ. 35 லட்சம் பணம்,,31 பவுன் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வர்ஷினி அவரது கார் டிரைவர் நவீன் குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மகள் போல பழகி அவருக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ. 3 கோடி பணம்_ நகை கொள்ளை அடிக்க பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.திருடப்பட்டு வரும் இளம்பெண் பரிசின் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக போலீஸ் சார்பில் கூறப்படுகிறது.இவர் முதலில் ஒருவருக்கு அறிமுகமாகும் போது அவர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தனது புகைப்படத்தை அனுப்பி வைப்பாராம் .அதில் அவர் மேக்கப் போட்டு நடிகை போன்ற அழகாக இருப்பார். இதை பார்த்த மயங்குபவர்களை குறி வைத்து தனது திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்அவரை கைது செய்த பின்னர்தான் அவர் எத்தனை பேரை இதுபோன்று ஏமாற்றியுள்ளார் ?என்பது குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.