ஓய்வு பெற்ற மில் ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை-பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் என் .ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி ( வயது 71) இவர் தேசிய பஞ்சாலை கார்ப்பரேஷனில் (என் டி.சி) ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் ராமநாதபுரத்துக்கு சென்று இருந்தார் .மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேசென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து கிருஷ்ணசாமி போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.