தைப்பூசை திருவிழாவை முன்னிட்டு உதகை எலிக்கல் கோவில் சாலைகள் தூய்மையாக காணப்படுகிறது…

நீலகிரி மாவட்ட உதகை எலிக்கள் பகுதியில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு 18வது வார்டில் மலைமீதுள்ள “எல்க்கில் முருகர்கோவில்” வளாகத்தில் தொடர்ந்து ஒருவார காலமாக பகுதி நகரம் என்ற உறுப்பினர் கே முஸ்தபா அவர்களின் ஆணைக்கிணங்க உதகை நகராட்சியால் சிறப்பாக சாலைகளையும் செடிகொடிகளையும் வேண்டாத குப்பைகளையும் அப்புறப்படுத்தி கோவிலுக்கு செல்லும் வழிகள் அனைத்தையும் சீரமைத்துள்ளனர், இன்று கொட்டுகின்ற உறை பணியிலும் நகராட்சி MHO Dr ஸ்ரீதர் தலைமையில் ஆய்வும் மேஸ்திரி மனோகரன் தலைமையில் தூய்மைப்பணி சகோதர சகோதரிகள் தூய்மைப்பணியும் வெகு சிறப்பாக நேற்று இன்று காலை வரை முழு வீச்சில் செய்து முடித்தனர், நேற்று இரவும் முழுவதும், இப்போது அதிகாலையே தொடங்கி குடிநீரைவழங்கி எழுத தடை என்றும் செயல்பட்டு வருகின்றனர் இதற்கான பணிகளை பிளம்பர் சுரேசும் செய்து கொடுத்தனர், நகராட்சி பணியாளர்களின் அனைத்து பணிகளுக்கும் 18 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா அனைவர்கக்கும்
நன்றி தெரிவித்தார், இன்று நடைபெறும் தைப்பூசை கோயில் விழாவிற்கு நீலகிரி பல பகுதியிலிருந்து வரும் மக்களுக்கு எவ்வித சிரமம் சாலைகளில் ஏற்படாமல் இருக்க மற்றும் குடிநீர் விநியோகம், இன்னும் பல காரியங்களை கோவிலுக்கு வரும் மக்களுக்கும் பகுதி மக்களுக்கும் பணிகளை சீரும் சிறப்புமாக செய்து தந்து வரும் 18 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே. ஏ. முஸ்தபா அவர்களுக்கு பகுதி மக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.,