கோனியம்மன் கோவில் முன் சாலை மறியல். 130 பேர் கைது.

கோவை; திருப்பரங்குன்றம் சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கோவை கோனியம்மன் கோவில் முன் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.இதில் ஈடுபட்ட குனியமுத்தூர் பிரபாகரன், சித்தாபுதூர் தசரதன், பவள வீதி பாலகிருஷ்ணன், ஆர். ஜி .வீதி, சோமசுந்தரம், மதுக்கரை ராஜமாணிக்கம், ரத்தினபுரி தனபால், ராம் நகர் சதீஷ், பேரூர் செந்தில்குமார், வெள்ளலூர் மணிகண்டன், செல்வபுரம் அருண்குமார் உட்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இதே போல கோவை துடியலூர் பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதாக உருமாண்டம் பாளையம் பாலன், கே. வடமதுரை ஜெய் கார்த்திக், கவுண்டம்பாளையம் தம்பி சரவணன், என். ஜி.ஜி.ஒ காலணி தியாகராஜன் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.