போக்குவரத்து காவலர்கள் போல் சீருடை அணிந்து பள்ளி மாணவர்களின் சாலை விழிப்புணர்வு

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் அமைந்துள்ள அனுக்கிரஹா மந்திர் பள்ளியின் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நடத்தப்பட்டது பள்ளி மாணவர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்தும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி காவலர்கள் போல் சீருடை அணிந்து சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி சூலூர் காவல் ஆய்வாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இந்நிகழ்வில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர், பிரபாகரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வையும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அலைபேசியை வாகனம் ஓட்டும்போது பயன்படுத்த கூடாது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசத்தில் இன்றியமையாமை மது போதையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்கவும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக் கள் குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கூறப்பட்டது. மாணவர்கள் அறிவுரையை ஏற்று வாகனங்களில் வருபவரிடம் சாலை பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினார் கள். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஷோபனா பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி தேசிய மாணவர் படை மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவமாணவ கலந்து கலந்து கொண்டனர்.