லண்டன் ரயில்வே ஸ்டேஷனில் பாப்பி மலர்களை விற்பனை செய்த ரிஷி சுனக்.. ஆச்சரியத்தில் பயணிகள் ..!!

மீபத்தில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் மக்களிடம் நெருங்கி பழகி வருவதாகவும் அணுகக்கூடிய வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

அந்த வகையில் திடீரென நேற்று அவர் லண்டனில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் பாப்பி மலர்களை விற்பனை செய்தது பெரும் பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

பிரிட்டன் பிரதமர் எதற்காக மலர்கள் விற்பனை செய்தார் என்பதை தற்போது பார்ப்போம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பிரிட்டனின் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் போரிஸ் ஜான்சனும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபின் ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார்.

ரிஷி சுனக் அவர்களுக்கு ஓரளவு ஆதரவு இருந்த போதிலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட லிஸ் டிரஸ் தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் லிஸ் ட்ரஸ் பதவி ஏற்ற லேஸ்ட் 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பிரதமர் பதவி ரிஷி சுனக் அவர்களை தேடி வந்தது.

இதனை அடுத்து கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் அவர்கள் சமீபத்தில் பதவியேற்றார். அவர் பதவி ஏற்றவுடன் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பிரிட்டனின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ரயில்வே ஸ்டேஷனில் திடீரென பிரதமர் ரிஷி சுனக், பாப்பி என்ற மலர்களை விற்பனை செய்தது பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. போர்க்காலங்களில் மரணம் அடையும் சிப்பாய்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விற்பனை செய்யப்படும் பாப்பிகளை அவர் ரயில் நிலையத்தில் விற்பனை செய்தார். பிரிட்டனின் படைவீரர்கள் நலனுக்காக நிதி திரட்டுவதற்காக அவர் இந்த விற்பனையை மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருடன் இராணுவ வீரர்களும் உடனிருந்தனர்.

பிசியான லண்டன் ரயில்வே ஸ்டேஷனில் பிரதமர் ரிஷி சுனக், பாப்பி மலர்களை விற்பனை செய்வதை பார்த்த பயணிகள் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். ஒரு பயணி இதுகுறித்து தனது ட்விட்டரில் கூறியபோது நான் வெஸ்ட்மின்ஸ்டர் ரயில்வே ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்கச் சென்றபோது பிரதமரை பார்ப்பேன் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

இன்னொரு ட்விட்டர் பயனாளி பிரதமர் ரிஷி சுனக் அவர்கள் பொதுமக்களிடம் எளிதில் அணுகக்கூடியவராகவும், மிகவும் அடக்கமாக இருப்பதாகவும் அவருடைய அணுகுமுறை தனக்கு மிகவும் பிடித்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். லண்டன் ரயில் நிலையத்தில் திடீரென பாப்பி மலர்களை பிரதமர் ரிஷி சுனக் விற்பனை செய்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.