தொலைதூர பயணங்களுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு நிறைவு பேருந்துகளில் சில்லறை தட்டுப்பாடு ஏற்படுவதன் காரணமாக பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும் பயணிகளின் வசதிக்காகவும் அரசு பேருந்துகளில் இனி யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. நடத்துனர்களின் டிக்கெட் பிரிண்ட் செய்யும் இயந்திரத்தின் பின்புறம் ஒட்டப்பட்டுள்ள கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்து பயணிகள் தங்கள் டிக்கெட் காண கட்டணத்தை செலுத்தலாம். வழக்கமாக நான் கடைகளில் பயன்படுத்துவது போலவே இந்த கட்டணத்தையும் செலுத்த முடியும். சோதனை முயற்சியாக சென்னை மாநகர் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டமானது திருச்சி சேலம் மதுரை நெல்லை கோவை உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் யுபிஐ மூலம் பயண கட்டணம் செலுத்தும் முறையை படிப்படியாக அறிமுகம் செய்து அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் இயக்கப்படும் பேருந்துகளில் முழுமையாக விரிவு படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0