ஈரோடு ஸ்ரீ சுந்தராம்பிகை சோளீஸ்வரன் திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த கோரிக்கை…. தனிநபர் கட்டுப்பாட்டில் செல்வதாக புகார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சபரிநாதன் தலைமையில்‌ மனு வழங்கப்பட்டது.

பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க பூசாரிகளுக்கு மாதாந்திர ஊதியம் ரூபாய் 10 ஆயிரம் ஓய்வூதியமாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

திமுக அறிவித்த தேர்தல் அறிக்கை அனைத்து நிறைவேற்ற வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபலமான அருள்மிகு ஶ்ரீ சுந்தராம்பிகை சோளீஸ்வரன் திருக்கோவிலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் துளசி பில்டர்ஸ் சத்தியமூர்த்தி அவர்கள் அராஜகம் செய்து கோவிலில் தனது சமூகத்திற்கு வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் அன்னக்கொடி,செயல் அலுவலர் முத்துசாமி,தக்கர் அருள்குமரன் போன்றவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு சத்தியமூர்த்திக்கு சாதகமாக செயல்பட்டு கட்டுமான பணிகளில் சுணக்கம் செய்து தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் செய்ய தடைசெய்து வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். உடனடியாக திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கு வலிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பவானி கூடுதுறை மற்றும் இப்பகுதியில் இருக்கும் இந்துக்களின் சொத்துக்கள் பாதுகாக்க படவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். என பேட்டியளித்தன..