குடியரசு தின பாதுகாப்பு… இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை!

குடியரசு தின பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் விமரிசையாக கொண் டாடப்பட உள்ளது. அந்த வகையில் சென்னையில் மெரினா உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையொட்டி சென்னையில் ஜனவரி 25, 26 தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது . சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. இதனால் மெரினா கடற்கரை பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது .