கோவையில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம் : 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.

கோவை; நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா கொண்டா டப்படுகிறது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார்,தேசிய மாணவர் படையினர், தீயணைப்பு துறையினர்,ஊர் காவல் படையினர் அணிவகுப் பைஏற்றுக் கொள்கின்றனர். கோவை வ உ சி பூங்கா மைதா னத்தில் நாளை குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நாளைகாலை 8 – 05 மணிக்கு கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கலெக்டர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதனை தொடர்ந்து சிறப்பாக பணி புரிந்த போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். இதை யடுத்து பள்ளி – கல்லூரி மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக வஉசிமைதானத்தை தயார் செய்யும் பணிகள் கடந்த 2 நாட்க ளாக நடைபெற்று வருகிறது. மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். குடியரசு தின விழாவை யொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாது தடுக்க மாநகரம் மற்றும் ஊரக பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது .கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்மேற்பார்வையில் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில். உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை ஊரக பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆயிரம் போலீசார் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையம், மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்களில்பலத்த பாதுகாப்பு பல படுத்தபட்டுள்ளது. விமான நிலையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீருடை அணியாத போலீசார் மாறுவேடத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்கும் விடுதிகள் நட்சத்திர விடுதிகளில் சோதனை நடந்து வருகிறது .கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.ரயில்களில் இன்றும் நாளையும் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.