கோவை மாநகராட்சிக்கு சொந்தமானரூ.7 கோடியே 70லட்சம் நிலம் மீட்பு

கோவை பீளமேடு ராதாகிருஷ்ணா மில் பஸ் நிறுத்தம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. அப்போது 22 சென்ட் நிலத்தை பொது ஒதுக்கீடு இடமாக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில்22 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனுக்குதகவல் கிடைத்தது .இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியானது. இதை யடுத்து மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் பணி தொடங்கியது. இதற்காக மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி சத்தியா தலைமையில் குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று ஆக்கிரமிக்கப்பட்ட22 சென்ட் நிலத்தை மீட்டனர் .இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான22 சென்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.7 கோடியே 70 லட்சம் இருக்கும். அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்புபலகை வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது அவ்வாறு ஆக்கிரமித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .இவர் அவர்கள் கூறினார்கள்.