ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட நபர்கள் ஆவடி காவல் ஆணை யாளர் அவர்களிடம் கொடுத்த புகாரை பெற்று இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் மற்றும் இணைய வழி குற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் பணம் செலுத்திய வங்கி கணக்குகளை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு உள்ள வங்கி கிளைகளுக்கு கடிதம் கொடுத்து மோசடி நபர்களின் வங்கி கணக்கை முடக்கம் செய்து பொதுமக்களிடம் இருந்து பணம் பறித்த மோசடி நபர்கள் 2024 ஆம் வருடத்தில் 18 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஆஜர் படுத்தப்பட்டனர். மோசடி நபர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல்ல முறையில் பெற்றுக் கொடுக்கப்பட்டது.ஆன்லைன் பங்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை மூலமாக பணத்தை இழந்த சுபத்ரா ரூ 48 ஆயிரம் கார்த்திக் 23 லட்சத்து 98ஆயிரத்து 500 முத்துகிருஷ்ணன் ரூ ஒன்பது லட்சத்து 97 ஆயிரத்து 984 ஆ யி சா ரூ 19 லட்சத்து 3 ஆயிரத்து 384 சுஷ்மா நந்தி படி ரூ 54 ஆயிரத்து 121 ரவீந்தர் பரி க் ரூ 20 லட்சம் கருணா நந்தம் ரூ 75 ஆயிரம் சரஸ்வதி ரூ 98ஆயிரத்து 808 அசோக் குமார் ரூ 3 லட்சம் சேஷாத்ரி ரூ 45 ஆயிரம் நிஷாத் ரூ 90 ஆயிரம் ஆகியோருக்கு மொத் தம் ரூ 80 லட்சத்து 82 ஆயிரம் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் அதற்குண்டான சான்றிதழ் ரெ மிடன்ஸ் சர்டிபிகேட் நேரடியாக பெற்றுக்கொண்டு ஆவடி காவல் ஆணை யாளர் சங்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0