கோவை திமுக வார்டு செயலாளர் மீது கொடுத்த பாலியல் புகாரில் சமரசம். காவல் நிலைய புகாரை வாபஸ் பெற்ற பெண்!

கோவை மாநகராட்சியில் திமுகவின் 40 வது வார்டு செயலாளராக கதிரேசன் உள்ளார், இவரின் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த பெண் சுதா (வ42), கடந்த வாரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார், அதில் தன்னை திமுக வார்டு செயலாளர் கதிரேசன் பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் , அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகாரில் தெரிவித்தார் அதன் அடிப்படையில் வடவள்ளி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த நிலையில் நேற்று காவல் நிலையம் சென்ற சுதா தான்,கதிரேசன் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளுவதாகவும், இனி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சமரசம் ஆகி விட்டோம், இனி நான் கொடுத்த புகாரில் எந்த மேல் நடவடிக்கையும் தேவையில்லை என்று கூறி மேலும் அதற்கான தகவல்களை தெரிவித்து கடிதத்தை காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்தார், இது பற்றி சுதா கூறுகையில் . நான் கடந்த ஆறு வருடமாக தி.மு.க. 40 வது வார்டு செயலாளர் கதிரேசன் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்தேன். இந்நிலையில் கடந்த 2.9.2024 கதிரேசனின் செல்போன் எண்ணிற்கு எண்ன சமைக்க வேண்டும் மென்று வாட்சாப்பில் குறுந்தகவல் அனுப்பினேன், அதை அவரது மனைவி நித்யா பார்த்து என்னை கேவலமாக வாய் கூசும் வார்த்தைகளை பேசினார் இதனால் நான் மிகுந்த மன உளைச்சல் ஆனேன், இதை எனது கணவரிடம் சொன்னேன் அவரும் அங்கு வேலைக்கு போக வேண்டாம், சம்பள பாக்கியை வாங்கி விட்டு இனி வீட்டு வேலைக்கு செல்ல கூடாது என்றார், இதை கேள்வி பட்ட என் உறவினர்கள்,பழக்கமானவர்கள் என்னை தூண்டிவிட்டு வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனிலும்,கமிஷனர் ஆபிஸ்லும் புகார் கொடுக்க வைத்து விட்டனர், ஆனால் வீட்டு வேலை செய்த பாக்கி சம்பள பணத்தை கொடுத்து, அவரது குடும்பத்தினர் உன்னை எங்க வீட்டு பிள்ளையாக கருதி இருந்தோம் என்றனர், நானும் எனது கணவரும் இனி நமக்கு மனசங்கடங்கள் வேண்டாம் சமரசம் செய்து கொள்ளுவோம் என்றோம், இதை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர், அதன் படி நான் காவல்நிலையத்தில் திமுக வார்டு செயலாளர் கதிரேசன் மீது கொடுத்த பாலியல் புகாரை தவறு எனக்கருதி திரும்ப பெற்றுக்கொள்ளுகிறேன் மேலும் எவரின் பேச்சுக்கும் ,மிரட்டலுக்கும் பயந்து நான் புகாரை வாபஸ் பெற வில்லை, இரண்டு குடும்பமும் ஒன்றாக பழகியது தவறாகி விடக்கூடாது என்றும் நல்ல மன நிலையில் தான் புகாரை திரும்ப பெற போலீசாரிடம் கணவருடன் வந்து கடிதம் கொடுத்தேன், அதில் எந்த சட்ட நடவடிக்கையும் வேண்டாம் என தெரிவித்து அதற்கான காரணத்தை எழுதி கொடுத்தேன் என்றார், போலீசார் தரப்பில் சொல்லுகையில் சுதா கொடுத்த புகாரை திரும்ப பெறும் கடிதத்தை மேல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளோம் அதன் படி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.