அதிமுக அலுவலகம் ஓ. பன்னீர்செல்வம் செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வருமாறு காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது
அதிமுகவின் அலுவலகத்திற்குச் செல்ல பாதுகாப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜேசிபி பிரபாகரன் நேற்று காவல்துறை சந்தித்து மனு என்ற அழைத்திருந்தார் இந்த மனு குறித்து காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் நீதிமன்றம் அதிமுக அலுவலகத்தில் பூட்டு சாவியை ஒப்படைக்க சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நீங்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருக்கிறீர்கள் இதுதொடர்பாக நீங்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுக்கொண்டால் பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்து பாதுகாப்பு தரப்படும் என்றும் காவல்துறை தகவல் தெரிவித்து இருக்கின்றன.