ஜூன் மாதத்தில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்க உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், தற்போது, ஜூன் மாதத்தில் புதன் கோளும் இந்த அணிவகுப்பில் இணையவுள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள் தோன்றும் நிகழ்வு 2002 இல் நடந்தது. இந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் நிகழும் இந்த அரிய நிகழ்வு அடுத்த முறை 2040 இல்தான் நிகழும். சூரிய உதயத்திற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன் இந்த அரிய நிகழ்வை நம்மால் காண இயலும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.