2 1/2 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு கட்டியை வீட்டை தருவதாக ஏமாற்றிய ராமசாமி கைது…

ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்ற போட்டியை வைத்தால் தமிழ்நாட்டை மிஞ்சுவதற்குஆட்களே இல்லை சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கண்ணையா செட்டி தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மகன் வாசுதேவன் வயது 61.ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்திக்க வந்திருந்தார் எனது 2 1/2 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு கட்டியை வீட்டை தருவதாக ஏமாற்றி விட்டான் என அழுது கொண்டே புகார் கொடுத்தார் புகாரை விசாரித்து மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் கீதாவை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொன்னார் பாதிக்கப்பட்ட வாசுதேவன் கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை கோடம்பாக்கம் பாளையக்காரன் குறுக்குத்தெரு அப்பார்ட்மெண்டில் இருந்த சுப்ரமணியனின் மகன் கேகே நகர் ராமசாமி வயது 64 என்பவனை என்னை அணுகி புதியதாக பளபளக்கும் ஒரு வீட்டை காண்பித்து இந்த வீட்டின் பவர் என்னிடத்தில் இருக்கிறது என ஏமாற்றி 1 கோடியே 50 லட்சம் வங்கி மூலமாகவும் 1 கோடி ரொக்கமாக வாங்கிக்கொண்டு எனது பெயருக்கு வீட்டையும் கிரயம் செய்து கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தான் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியும் வந்துள்ளான் வாசுதேவனின் மகன் அஸ்வின் குமார் ஊரை ஏமாற்றும் ராமசாமி ரூ 1 1/2 கோடி டிக்கு ஒரு செ க்கையும் மற்றொரு செக்கை ரூ 1 கோடிக்கும் கொடுத்துள்ளான் அஸ்வின் குமாரும் 2 1/2 கோடி ரூபாய் கிடைத்துவிட்டது என்ற ஆசையில் வங்கிக்கு சென்று செக்கை அக்கவுண்டில் போட மேனேஜரிடம் கொடுத்துள்ளார் அவரும் வாய்மொழியாக நீங்கள் கொடுத்த செக்கில் பணமே இல்லை உங்களை நல்லா ஏமாத்திபுட்டான் பிராடு ஆசாமி விடாதீங்க அவனை புடிங்க என சொல்லி அனுப்பி வைத்தார் இதன் பேரில் குற்ற பிரிவு துணை ஆணையர் பெருமாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா கிடுக்கி பிடி யோடு அலைந்து திரிந்து ராமசாமியை திருவான்மியூர் மெயின் ரோடு ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் நெற்றி எல்லாம் விபூதி பட்டை பூசிக்கொண்டு பெரிய சிவன் பக்தர் போல் என்னை காட்டிக்கொண்டு சிக்கிக்கொண்டான் போலீஸில் பிடிபடும் போது என்னை பிடிக்க வச்சிட்டாங்க இல்ல நான் ஜாமினில் வெளியே வந்ததும் வாசுதேவனை கொல்லாமல் விடமாட்டேன் என சபதம் போட்டான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட குற்றவாளி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.