கோவை மாநகரில் ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்.புதிய போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பேட்டி

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய பாலகிருஷ்ணன் சென்னை தலைமை இடத்து ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கோவை சரக டிஐ.ஜி யாக பதவி வகித்து வந்த சரவண சுந்தர் ஐ ஜி.யாக பதவிஉயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலை பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகரில் பெண்களுக்கு எதிரானவழக்குகள், விபத்து தடுப்பு நடவடிக்கை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும். அதேபோலகோவை மாநகரத்தில் 24 மணி நேரமும் கண் காணிப்பு தீவிர படுத்தப்படும் ” பீட் ஆபிசர்ஸ் ” என்ற திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு பணிகள் செய்யப்படும். ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் கஞ்சா, போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற் கொள்ளப்படும். ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள். முன்னாள் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்த காவல் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கோவை மாநகரில் முக்கிய பிரச்சினையான போக்குவரத்து நெரிசலை சீர் செய்யஅனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். புதிய போலீஸ் கமிஷனருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் துணை கமிஷனர்கள் சரவணகுமார், ஸ்டாலின், சுகாசினி, அசோக்குமார்,ராஜ் கண்ணா மற்றும் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.