ராணி எலிசபெத் காலமானார்..கொட்டும் மழையிலும் திரண்டு வந்த மக்கள் அஞ்சலி.. 10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!!

ண்டன் :’பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து, பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ராணி 2ம் எலிசபெத் (96), உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் உள்ள பால்மோல் கோட்டையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு இந்திய நேரப்படி 11:05 மணியளவில் பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் காலமானதாக அரண்மணை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

1926-ம் ஆண்டு பிறந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டனின் ராணியாக அரசுப் பணியை ஏற்று, 70 ஆண்டுகள் திறம்பட ஆட்சி செய்து வந்தார். 96 வயதாகும் இரண்டாம் எலிசபெத், பிரிட்டனில் நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்த சாதனையை 2015ல் புரிந்தார்.

ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.