ரூம் போட்டு யோசிப்பாங்களோ… நூதன முறையில் விமான நிலையத்தில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்-மடக்கி பிடித்த காவல் அதிகாரிகள்!

நூதன முறையில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல். மடக்கி பிடித்த காவல் அதிகாரிகள்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக தகவல் வெளியிடப்பட்டது.இத்தகவல், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷ்னர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் குழப்ப நிலையில்,அவர் முகத்தில் தெளிவு இல்லாமல் இருந்துள்ளார்.இந்த காரணத்தினால் அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் அவரை விசாரணை செய்தனர்.ஆனால், அவரை விசாரணை செய்ததில் அதிகாரிகள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் சரியான பதில் அளிக்காமல் ஏறுமாறலாக பதில் கூறியுள்ளார்.

இதனையடுத்து இளைஞனை முழுமையாக பரிசோதித்தனர்.மேலும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் இளைஞனின் ஆடைகளை பரிசோதித்ததில் ஏதும் கிடைக்கவில்லை.பின் அவர் கையில் இருந்த சூட்கேஸ் ஜிப் பகுதி கழட்டிவிட்டு பின் அதை வித்தியாசமான முறையில் தைக்கப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை பிரித்து பரிசோதனை செய்தனர்.

சூட்கேசின் தையல் பகுதியை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது பல லட்சம் மதிப்புள்ள தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது.இதனை பார்த்த அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.மேலும், தங்கத்தை சூதானமான முறையில் உருக்கி கம்பி போல் செய்து சூட்கேசில் மறைத்து கொண்டு வந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதில் இருந்த தங்கமானது ரூ 46 லட்சத்து 24 ஆயிரம் என கூறியுள்ளனர்.கிட்டத்தட்ட 1 கிலோ 38 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் வாலிபரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.பின் அந்த இளைஞனை விமான சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.