கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அலுவலக த்தில் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக பதிவு செய்வதற்காக தொடுதிரை கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் சார்பில் சைபர் குற்றங்களை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடுதிரை கருவி மூலம் புகார்கள் பதிவு செய்வதுடன் போலி இ-மெயில், ஆன்லைன் செயலி வாகனப்பதிவு எண்களை அறியலாம். இது தவிர சைபர் குற்ற விழிப்புணர்வு தகவல்களையும் பெறலாம் .தற்போது சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் கோவை நகரில் சைபர் கிரைம் மோசடி ஆசாமிகளிடம் பொதுமக்கள் ரூ. 91 கோடியை இழந்துள்ளனர். இதில் மோசடி கும்பலுக்கு சென்றடையாமல் ரூ. 49 கோடி முடக்கி வைக்கப்பட்டது .ரூ. 31 கோடிபாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் மீட்டு வழங்கப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலி மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி ,தற்போது அதன் மூலமாக சைபர் குற்றங்களை நடைபெற்று வருகிறது. கூரியர் மூலம் போதை பொருட்கள் வந்திருப்பதா கவும் நடவடிக்கை எடுக்க போகிறோம் என்று போலீஸ் அதிகாரிகள் போல பேசி பணத் தைக் கேட்டு மோசடி செய்கிறார்கள். இது தவிர முதலீட்டுக்கு அதிக பணம் தருவதாக கூறுவது ஷேர் மார்க்கெட்டுகளில் முதலீடு செய்வது போன்றது போலியான பெயர்களில் செயலிகளை உருவாக்கி ஏமாற்றி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும். போனில் ” ஸ்பேம் கால் ” என்று வந்தால் பொதுமக்கள் யாரும் அந்த அழைப்பு எடுக்காமல் துண்டித்து விட வேண்டும் .அதன் மூலமாக பல சிக்கல்களை தவிர்க்கலாம்.கோவையில் ஆன்லைன் புகார்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது 20 21 ஆம் ஆண்டு புகார்களின் எண்ணிக்கை 2,200 ஆக இருந்தது. 20 22 ஆம் ஆண்டு 4,500 ஆக உயர்ந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு 6,300 என்று இருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இதுவரை 7,468 ஆக உயர்ந்துள்ளது.272 புகாரிலுக்கு எப். ஐ. ஆர் .பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் புகார்களுக்கு சி.எஸ்.ஆர். பதிவு நகல் வழங்கப்பட்டுள்ளது. கோவை நகரில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கால் டாக்சி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படுகிறது தவறில் ஈடு படும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் சுஹாசினி, இன்ஸ்பெக்டர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0