ஆவடியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் காவல் ஆணையாளர் கி. சங்கர் அவர்கள் தலைமையில் திருமுல்லைவாயில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. கூடுதல் காவல் ஆணையாளர் மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையாளர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து 69 புகார் மனுக்களை பெற்றனர். உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார்கள். இக் குறைதீர்க்கும் முகாமில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இக்குறை தீர்க்கும் சிறப்பு பொது மக்கள் குறை கேட்பு முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் என போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.