ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம். திருமுல்லைவாயில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இக் குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 65 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஆவடி காவல் ஆணையரகத்தில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான 90 வழக்குகளில் 69 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 21 வழக்குகளின் கோப்பினை ஆய்வு செய்து காணாமல் போன குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக் குறைதீர்க்கும் முகாமில் கூடுதல் காவல் ஆணையாளர் ஆவடி செங்குன்றம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர்.