நீலகிரி மாவட்டம் வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை
வரலாறு சிறப்புமிக்க இடம் என்பது எல்லாருக்கும் தெரியும், அனைத்து சாலைகளுமே இயற்கையாகவே பயன்படுத்தக் கூடியவை, இதில் நீலகிரி உதகை கமர்சியல் சாலை வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு சாலை, இங்கு ஷேரிங் கிராஸ் முதல் காப்பி ஹவுஸ் வரையிலும் ஏராளமான கடைகள், உணவு விடுதிகள், உள்ளன, வெள்ளையர் ஆட்சி காலத்தில் இருந்து இன்று வரை நகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்று இங்கு உள்ளது இதன் அழகின் சிறப்பு நாளுக்கு நாள் பழுதடைந்து வருகிறது, இந்தப் பூங்காவை போதிய அளவில் பராமரிக்காமல் உள்ளதால் அந்த சாலையின் அழகை சீர்குலைத்து வருகிறது, தற்போது இந்த சாலை பார்க்கிங் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன, இந்த உதகை கமர்சியல் சாலை வரலாறு மிக்கது பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இன்று வரை சாலை தோற்றம் அனைவரையும் இயற்கையாகவே கவர்ந்த ஒரு சாலை, தற்போது வாகனங்கள் உதகைக்கு வருவது அதிகரிப்பதாலும் பொதுமக்கள் வாகனங்களும், நிறுத்துமிடம் இல்லாததாலும், இந்த கமர்சியல் சாலையை நீலகிரி உதகை காவல்துறையினர் பார்க்கிங் முறையை மாற்றி உள்ளனர், இது நடைபாதையை தாண்டி பார்க்கிங் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையூறாக உள்ளது,
நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர், இந்தப் திடீரென்று பார்க்கின் முறையை அனைவருடைய வசதிகளையும் ஒப்புதலையும் ஏற்று செய்தால் நன்றாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர், இந்த திடீர் மாற்றத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் குழம்பி உள்ளனர்,
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0