கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 16 வாகனங்கள்எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30. ஆம் தேதி காலை 10.00 மணிக்குகோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட 16 வாகனங்களும் கோவை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற 29. -ஆம் தேதி மாலை 05.00 மணி வரை வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் அவ்வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 29 ஆம் தேதிஅன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.1000/- மற்றும் நான்கு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.2000/- முன்பணம் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். மேலும் வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தெரிவித்துள்ளார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0