சூலூர் நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை, சூலூர் நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பங்களாதேஷ் இந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து சூலூர் நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், பிஜேபி மண்டல தலைவர் ரவிக்குமார், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் ,மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நகர பொதுச்செயலாளர் மகேஷ், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு மதன் ,பிஜேபி நகர தலைவர் அசோக், மண்டல செயலாளர் பூங்கொடி, துணைத்தலைவர் ரங்கநாதன், பொதுச் செயலாளர் நந்தகோபால், மற்றும் இந்து முன்னணி, பிஜேபி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.