ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் பொது செயலாளர் முகம்மது சுலைமான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார் . இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் மற்றும் கீழக்கரை நகர செயற்குழு உறுப்பினர் ஹாமிது பைசல் ஆகியோர் கண்டன கோஷத்தை எழுப்பினர். மாவட்டத் துணைத் தலைவர் டாக்டர் ஜெமிலு நிஷா , மாவட்டச் செயலாளர்கள் சகுபர் சாதிக் , அப்துல் மஜீத் , மாவட்ட பொருளாளர் ஹசன் அலி , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோமு , நவ்வர்ஷா , ராஜ்குமார் , திருவாடனை தொகுதி தலைவர் முகமது ஹனீஃப் , தொகுதி செயலாளர ஹமீது இப்ராஹிம் , WIM மாவட்டத் தலைவர் ரம்ஜான் பேகம் , மாவட்ட பொதுச் செயலாளர் சித்தி நிஷா , மீனவரணி மாவட்ட தலைவர் பக்ருதீன் உட்பட தொகுதி நகர ஒன்றியம் கிராம பஞ்சாயத்து கமிட்டி கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் உப்பிட பலர் கலந்து கொண்டு கண்ணனத்தை தெரிவித்தனர். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் அமீனுல்லா நன்றியோடு நிறைவு பெற்றது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0