கோவை வடவள்ளி – மருதமலை ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அ ழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வீரகேரளம், குறிஞ்சி நகரை சேர்ந்த ஸ்ரீ குமார் சுரேஷ் ( வயது 30) கணுவாய் தடாகம் ரோடு, திருவள்ளூவர் நகரை சேர்ந்த சத்தியன் மனைவி சாஜிதா (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த மசாஜ் அழகிகள் தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்த சூரிய கலா ( வயது 24) சென்னை மேட்டுக்குப்பம் விநாயகபுரத்தைச் சேர்ந்த நந்தினி தேவி ( வயது 30) ஆகியோர் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த மசாஜ் சென்டர் சீல் வைக்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0