பியூட்டி பார்லர்களில் விபசாரம். 9 பெண்கள் கைது

கோவை பீளமேடு அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடுபோலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.. இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போதுஅழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்துஅங்கிருந்த சேலம் சோனியா (வயது 38) கணபதி மகேஸ்வரி ( வயது 32) மலுமிச்சம்பட்டி நர்மதா ( வயது 30) மணிப்பூர் ஜென் மெல் ( வயது 30) காந்தி மாநகர் கவுசல்யா (வயது 30) சென்னை லதா ( வயது32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இம்மானுவேல் என்பவர் தலைமறைவாகி விட்டார்.பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டது.இதே போல ராம்நகர்,செங்குத்த வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் செயல்படும் பியூட்டி பார்லரில் காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த சென்னை லிங்கப்பசெட்டி வீதியைச் சேர்ந்த பிரமோத்குமார் (வயது 24) நாகலாந்து ரேச்சல் மரிய மணி (வயது 32) நாகலாந்து போலிவி ( வயது26) மணிப்பூர் ஜூலி (வயது 32)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.ஆசீர், மணி பிரபு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர் இவர்களை தேடி வருகிறார்.