கீழக்கரையில் மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் இணையதள இணைப்பு வயர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மின் கம்பங்களில் தனியார் இணையதள வயர்கள் மற்றும் கம்பிகள் பொருத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், கீழக்கரை நகர் முழுவதும் மின்வெட்டுகள் ஏற்பட்டு அவ்வப்போது பழுது பார்க்க வரக்கூடிய ஊழியர்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக மின்வாரியத்தூருக்கு தகவல் கொடுத்தால் கண் துடைப்பிற்காக அரசு கேபிள்களை துண்டித்து விட்டு தனியார் கம்பிகளை விட்டு செல்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.

தனியார் இணையதள சேவை நடத்தக்கூடியவர்கள் பெரும்பாலும், ஆளும் கட்சியைவர்கள் என்பதால் அவர்கள் அரசு மின் கம்பங்களில் வயர்கள் மற்றும் இல்லாமல் கம்பிகள் பொருத்தி முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக, மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் மின்வாரியத்துடைய பணியாளர்கள் அரசு கேபிள்களையும் ஒரு சில தனியார் கேபிள்களை மட்டும் கண்தொடைப்புக்காக செய்துவிட்டு செல்வதாக புகார் கூறப்படுகிறது.

மின் கம்பங்களை தனியார் இணைய தள சேவைக்கு முழுமையாக பயன்படுத்திக்கொண்டு அதில், வயர்களை அமைத்து முழுமையாக ஆக்கிரமிப்பு செய்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வயர்களையோ இரும்பு கம்பிகளையோ துண்டிக்காமல் விட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மின் வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பங்களில் தனியார் நிறுவனத்தின் வயர்களோ கம்பிகளோ பொறுத்த கூடாது என்ற விதி இருந்தும் அதை பொருட்படுத்தாமல் ஆளும் கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி மின் கம்பம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இது பெரும்பாலும் மின்தடையை பழுது நீக்க மின்வாரிய ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.