கோவை ரயில் நிலையம் ரோட்டில் தீயணைப்பு நிலையத்துக்கு எதிரே ஒரு மூதாட்டி நடந்து சென்றார்.அவர் மீது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் டவுன் பஸ் மோதியது .இதில் அந்த மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்துக் புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரண நடத்தினார்கள். விசாரணையில் விபத்தில் பலியானவர் சென்னையை சேர்ந்த கலா (வயது 70) என்பது தெரியவந்தது . இவர் அந்த பகுதியில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் .இது தொடர்பாக ஆலந்துறை பூலுப்பட்டி ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் வினித் (வயது 30) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0