கோவை சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை.

கோவை; மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 35) இவர் மீது திருட்டு, வழிப்பறி, உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று காலை அரை கால்சட்டையில் உள்ள நாடா கயிறை எடுத்து கம்பியில் கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் சிறை காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியில் சரவணகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.