பள்ளிக்கூட மாணவிக்கு செல்போனில் ஆபாச வீடியோ காட்டிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன் புரம் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் ( வயது 44) இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார் .அந்த பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பிராங்கிளின் செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்டி பேசியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.. அனைத்து மகளிர போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துகடந்த 30 ஆம் தேதிதலைமை ஆசிரியர் பிராங்கிளினை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.