மத்திய அரசு 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியுதவி மூலம் வழங்குவதை, மோடி தலைமையிலான அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.
எனவே இந்த 2002 ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி திட்ட இலக்கை அடைவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்நிலையில் 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிலும் ஆந்திரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ,ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.