கோவையில் 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில். இறந்த 58 பேருக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். கோவைக்கு வந்த பிரதமர் மோடி சாய்பாபா காலனி முதல் ஆர். எஸ். புரம் தலைமை தபால் நிலையம் வரை பிரம்மாண்டமான வாகனஅணி வகுப்பில் கலந்து கொண்டார். .இந்த வாகன அணிவகுப்பு சாய்பாபா கோவில் அருகே நேற்றுமாலை 6:30 மணிக்கு தொடங்கி ஆர் .எஸ் . புரத்தில்இரவு 7:10 மணிக்கு முடிவடைந்தது. இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கோவையில் ஆங்காங்கே தொடர் குண்டுவெடிப்பு நடந்தது .இதில் 58 பேர் உயிரிழந்தனர். அதில் ஒரு இடமான ஆர். எஸ். புரம். டி பி ரோடு தலைமை தபால் நிலைய பகுதியில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்ட பிறகு மோடி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குண்டு வெடிப்பு சம்பவம் குறித்தும் பலியானவர்கள் குறித்தும், பாஜக மாநில பொருளாளர் எஸ். ஆர் .சேகரிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு கூடியிருந்த பொது மக்களை பார்த்து கையசைத்தார். பொதுமக்களும் உற்ச்சாககத்துடன் கை அசைத்தனர். அதன்பிறகு 7 – 20 மணியளவில் பிரதமர் மோடி அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கோவை ரேஸ் கோர்சில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்..இரவில் அங்கு தங்கி ஓய்வெடுத்தார். பிரதமர் பொறுப்பு ஏற்றதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கோவையில் மோடி இரவில் தங்கியது தற்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.. இதற்கிடையில் பிரதமர் மோடி தன்னிடம் கேட்ட விவரங்களை குறித்து எஸ் ஆர் சேகர் கூறியதாவது:- 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை தொடர்பு சம்பவம் மற்றும் அதில் பலியானவர்கள் குறித்து பிரதமர் என்னிடம் கேட்டறிந்தார். அப்போது ஆர். எஸ். புறத்தில் அத்வானி பேச இருந்த மேடை அருகே குண்டு வெடித்தது குறித்தும் அத்வானி பேச இருந்த மேடை அருகே மனித வெடிகுண்டு நடமாட்டம் இருந்தது குறித்தும் விளக்கி கூறினேன். இந்த சம்பவங்களை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல். முருகன், மாநில தலைவர் அண்ணாமலை வானதி சீனிவாசன் எம்எல்ஏ முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் எச். ராஜா கே .செல்வ விநாயகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.இன்று காலை 9 – 30 மணிக்குசுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்றார். 9 – 45மணிக்கு ஹெலிகாப்டரில் பாலக்காடு புறப்பட்டார்.அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியம் ஹெலிகாப்டரில் சேலம் சென்றார்.அங்குபாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.பின்னர் சேலத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0