கோவை; தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள், பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சி பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று மதியம் 2 – 45 நடந்தது.இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2 – 05 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 2 – 35 மணிக்கு பல்லடம் சென்றார்.மதியம் 2 – 45 மணி முதல் 3- 45 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர்சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையொட்டிகோவை -திருச்சி ரோட்டில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து 4 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை புறப்பட்டு சென்றார். மதுரையில் தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் இரவு மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார் அதன் பிறகு நாளை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடியில் நடக்கும் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார் பின்னர் நெல்லையில் காலை 11 -15 மணி முதல் 12- 15 மணி வரை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதை யடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0