திருச்சியில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழு டிட்டோஜாக் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் ஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சுழல் முறை மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது. தமிழக அரசு அரசாணை எண் 243 ஐ பிறப்பித்து தொடக்க கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களை மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் 42 அரசாணையை பின்பற்றி ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்க வேண்டும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வருகிற 31ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் ஒன்றாம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அடையாள வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெறும் செப்டம்பர் 10ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் அன்றைய தினமே அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் அப்போதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் டிட்டோஜாக் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சென்னை கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார் அருகில் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0