தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்புடன் நடைபெறுகிறது..!!

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளா மாநிலத்தில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “பிற மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் தொடக்கத்திலேயே சிகிச்சை பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.