திருச்சியில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் மழை வேண்டி தொழுகை.

தமிழகத்தில் தற்போது பருவமழைபொய்த்துவிட்டதாலும், நிலத்தடிநீர் செறிவூட்டலுக்கும் எந்த முயற்சியும் செய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது, மேலும் திருச்சியிலுள்ள ஏரி, குளங்கள் வரண்டு கிடக்கின்றன. மேலும் விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகள் மழை இல்லாததால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்திற்கொண்டு திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி பாலக்கரை பிரபாத் திடலில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று தமிழகத்தில் மழைபெய்து வளம்பெருக வேண்டி நபிவழியில் சிறப்பு தொழுகை நடத்தினர். இவ்வாறு தொழுகை செய்வதன் மூலம் முகம்மது ஸல் அவர்கள் நிச்சயம் மழைபொழியச் செய்வார் என நம்பிக்கையில் அவர்கள் கைகளை உயர்த்தி, கண்ணீர்மல்க அனைவருக்காகவும் துவாசெய்தனர். இதில் ஏராளமான ஆண்களும் இளைஞர்களும் சிறுவர்களும் திரளாக கலந்து கொண்டு இந்த சிறப்பு தொழுகையை சிறப்பித்தனர்.