வால்பாறை தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் வெற்றிபெற்ற பிரதி நிதிகள் தொழிற்சங்க தலைவர் அமீதுவிடம் வாழ்த்து பெற்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தாய் முடி எஸ்டேட், தாய் முடி யூ.டி, தாய் முடி என்.சி.உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் அதிமுக தொழிற் சங்கத்தின் சார்பாக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அனைவரும் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீதுவை தொழிற்சங்க அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.