நீலகிரி மாவட்ட உதகையில் கடந்த சில வாரங்களால் கொட்டித் தீர்த்த கனமழைகளும் வரலாறு காணாத காற்றாலும் உதகை 2வது வார்டு பகுதி வீசி காலனி ஆர்சி காலனி பட்பயர் பகுதியில் மலை மற்றும் பலத்த காற்றினால் 15க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் வீடுகள் அருகிலும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீது விழுந் பலத்த சேதம் அடைந்தன மற்றும் மின்கம்பங்கள் மேல் விழுந்ததால் மின் கம்பிகள் அருந்து விழுந்தன, இதனால்
800க்கும் மேற்பட்ட வீடுகள் 4 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, இதனை அறிந்த அப்பகுதி 2வது வார்டு நகர மன்ற உறுப்பினர் நாகமணி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வீடுகள் சாலைகள் மின் கம்பிகள் அனைத்தையும் பார்வையிட்டு உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடி பணிகளை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாகனங்கள் மீதும் மின்கம்பங்கள் மீதும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர், அதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அலுவலர் போர் மேன் சங்கர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சதீஷ், சிவா, சவுந்தரி, மற்றும் சக ஊழியர்கள் கொட்டும் மலையை பொருட்படுத்தாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து விசி காலனி, ஆர் சி காலனி, பட் பெயர் போன்ற பகுதிகளில் 15 மரங்கள் பல இடங்களில் விழுந்ததால் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அதிகமாக சேதம் அடைந்ததை மின் ஊழியர்கள் கடுமையான குளிரிலும் மழையிலும் வேலைகளை துல்லியமாக செய்து வந்தனர், இவர்களுக்கு அனைத்து உதவிகளை அப்பகுதி நகர மன்ற உறுப்பினர் நாகமணி அவர்கள் செய்து தந்தனர், அவருடன் அவர் பகுதியில் உள்ள, பட் பெயர் பத்மநாதன், எஸ்தர், ரவி, கலையரசன், மற்றும் அப்பகுதி மக்கள் உதவிகளுடன் இப்பணிகள் சீராக சிறப்புமாக செய்யப்பட்டன, மிக மோசமாக துண்டிக்கப்பட்ட மின் கம்பிகள் மின் கம்பங்களை மீண்டும்
சீரமைக்கப்பட்டு தந்த உதகை மின்சார வாரிய ஊழியர்களுக்கு நகர மன்ற உறுப்பினர் 2வது வார்டு நாகமணி மற்றும் பொதுமக்கள் சார்பாக மிக்க நன்றிதெரிவித்தார்கள், தற்போது நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது அப்பாவி மக்கள் தங்கள் நகர மன்ற உறுப்பினர் நாகமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0