பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கேரளாவை சேர்ந்தவரான ஜெயச்சந்திரன் வயோதிகம் மற்றும் கல்லீரல் பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் பூக்குன்னத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அதைத்தொடர்ந்து அவர் திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. 1973-ல் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் இதழே…’ பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடகர் ஜெயச்சந்திரன் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கும்படி அமைந்துள்ளன. இன்றும் அவரது காந்த குரலை கேட்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது பாடல்களை இன்று கேட்டாலும் காதில் தேனருவி ஓடும். அவ்வளவு இனிமையானவை, கேட்க, கேட்க திகட்டாதவை என்றால் அது மிகை யாகாது. தெரிவித்து வருகின்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0