பூந்தமல்லி நகர மன்ற கூட்டம் தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடந்தது நகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார் அனைத்து கவுன்சிலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் தலைவர் காஞ்சனா சுதாகர் பேசுகையில் பூந்தமல்லி நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தாய் உள்ளத்தோடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 6 ஆயிரம் வழங்கினார். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ 1000 வழங்கி கௌரவித்தார் நாம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மனதார பாராட்டி நன்றி தெரிவித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றுவோம். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் நகர மக்களுக்கு எந்தவித குறையும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சாலை வசதிகள் குடிநீர் வசதி மழைநீர் வடிக்கால்வாய் வசதி தெரு விளக்குகள் வசதி எங்குமே தண்ணீர் தேங்காத பகுதிகள் மக்கள் மனம் குளிரும்படி பேச வேண்டும் நாடாளுமன்றத் தேர்தல் துவங்கவதற்கு முன்பே அனைத்து பணிகளையும் முடித்தாக வேண்டும் என காஞ்சனா சுதாகர் பேசினார்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0